கருவில் சுமந்தாய்
கனவுகளோடு வாழ்ந்தாய்
கண்டிப்போடு வளர்த்தாய்
கரம் கொண்டு அணைத்தாய் ...
விரும்புவதை விருப்புடன் தருகிறாய்
எனக்காகவே வாழ்கிறாய்
பலம் சேர்க்க பலர் இருந்தாலும்
கண்கள் தேடுகிறது உன் நிழலை ...
கண்டதில்லை தெய்வத்தை
காண்கிறேன் உன் உருவத்தில்
வேண்டுவதை தருகிறாய்
வலி எனக்கென்றால் துடிக்கிறாய் ...
தந்தையின் அன்பை பறித்தான் இறைவன்
இழந்த அன்பை இருமடங்காகி தந்தாய்
ஏக்கம் இன்றி வளர்த்தாய்
என்றும் என் மனதில் நின்றாய் ...
நீ துணையின்றி வாழ்ந்தாலும்
எனக்கு உறுதுணையாய் நின்றாய்
நடக்க கற்றுகொடுத்தாய்
துவளும் போது தோள்கொடுத்தாய் ...
இறைவா என்னை சுமந்த என் தாயை
கல்லரைவரை சுமக்கும் பாக்கியத்தை
மட்டும் தந்துவிடு ...
No comments:
Post a Comment